பிரபல பாலிவுட் நடிகரான ராஜீவ் கபூர், 'ராம் தேரி கங்கா மெய்லி', 'ஏக் ஜான் ஹைன் ஹம்' உள்ளிட்ட பலபடங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.இவர், 'பிரேம் கிரந்த்' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இவருக்கு வயது 58. இன்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட, சகோதரர் ரந்தீர் கபூர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
நடிகர் ராஜீவ் கபூரின் இந்தத் திடீர் மரணம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.