Advertisment

ரஜினி மகள் வீட்டில் நகை திருட்டு; பணிப்பெண் சிக்கினார்

actor rajinikanths daughter aishwaryas maid stole jewelery from her home

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டிலுள்ள லாக்கரில் இருந்த நகைகளைக் காணவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்

Advertisment

மேலும், நகைகளை லாக்கரில் வைத்திருந்தது தனது வீட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தெரியும் என்றும் புகார் மனுவில் தகவல் தெரிவித்திருந்தார். வீட்டில் பணிபுரியும் பணியாளர்களே நகைகளைத் திருடி இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் ஐஸ்வர்யா குறிப்பிட்டிருந்தார். வைர நகைகள், தங்க நகைகள், நவரத்தினக் கல் என ரூ.3.6 லட்சம் மதிப்பிலான நகைகளைக் காணவில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்த பெண் நகையை திருடியதாக கண்டுபிடித்துள்ளார்கள். அவரிடமிருந்து முதற்கட்டமாக 20 பவுன் தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் நகைகளைமீட்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. விரைவில் சிக்கிய பணிப்பெண் பற்றியும் நகைகள் விவரம் பற்றியும் முழுவிவரம் தெரிவிக்கப்படும் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actor Rajinikanth aishwarya rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe