Advertisment

ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்த்திய ரஜினிகாந்த்!

ar rahman

Advertisment

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘99 சாங்ஸ்’ என்ற படத்தின் மூலம் கதாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார். இசையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஹ்மான் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள 14 பாடல்களும் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் இன்று (16.04.2021) வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பட வெளியீட்டை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘99 சாங்ஸ்’ படத்தின் போஸ்டரை பகிர்ந்து, "‘99 சாங்ஸ்’ படத்தின் வெளியீட்டிற்காக வாழ்த்துகள் ஏ.ஆர்.ரஹ்மான். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, தனக்கு வாழ்த்துத் தெரிவித்த ரஜினிகாந்திற்கு ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி தெரிவித்தார்.

Advertisment

ACTORS RAJINIKANTH ar rahman
இதையும் படியுங்கள்
Subscribe