actor rajinikanth thanks tn cm Stalin

Advertisment

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்த், நேற்று (12.12.2021) தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அந்தவகையில், தமிழ்நாடு முதல்வர்மு.க. ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்துக்கு ட்விட்டர் பதிவின்மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "என்னுடையபிறந்தநாளன்று என்னை நெஞ்சார வாழ்த்திய மதிப்பிற்கும், மரியாதைக்கும்உரியஎன் அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.