Advertisment

அரசியல் தலைவர்கள் முதல் ரசிகர்கள் வரை... நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ரஜினி!

rajinikanth

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்திற்கு 'தாதாசாகேப் பால்கே' விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று (01.04.2021) வெளியானது முதலே, நடிகர் ரஜினிகாந்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தனக்கு விருது வழங்கிய மத்திய அரசு மற்றும் வாழ்த்துதெரிவித்த அரசியல் பிரமுகர்கள் என அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வாயிலாக நேற்று நன்றி தெரிவித்தார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="fa21ed66-63ea-4b41-8b42-9ca5dc43099a" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/sulthan%20ad_18.png" />

Advertisment

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வாழ்த்துதெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தற்போது ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், என்னுடைய திரைத்துறை நண்பர்கள், சக பணியாளர்கள், ஊடகத்தினர், நலம் விரும்பிகள் மற்றும் எனக்கு வாழ்த்துதெரிவிக்க தங்கள் நேரத்தை ஒதுக்கிய அனைவருக்கும் நன்றி. மேலும், இந்தியாவில் உள்ள ரசிகர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களுக்கும் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.

Actor Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe