/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva_87.jpg)
இயக்குநர்சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயனதாரா நடிக்க, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ஜெகபதி பாபு, மீனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகபெரும் வெற்றி பெற்றாலும், கலவையான விமசர்னங்களையேபெற்றது. இருப்பினும் படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சிறுத்தை சிவாவுக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள சிவாவின் இல்லத்திற்கு நேற்று (8.12.2021) முன்னறிவிப்பின்றி நடிகர் ரஜினிகாந்த் சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனையடுத்து சிவாவை கட்டியணைத்து பாராட்டிய ரஜினிகாந்த் தங்க செயின் ஒன்றைபரிசளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)