'அண்ணாத்த' படக்குழுவினருக்குத் தங்க செயின் பரிசளித்த ரஜினி!

actor rajinikanth presented gold chain annaatthe movie team

இயக்குநர்சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ஜெகபதி பாபு, மீனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகபெரும் வெற்றி பெற்றாலும், கலவையான விமசர்னங்களையேபெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b28184b6-b753-4c75-aad6-22636324f435" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/AVV-article-inside-ad_22.jpg" />

'அண்ணாத்த' படம் வெளியாகி இன்றோடு (24.12.2021) 50வது நாளை கடந்துள்ள நிலையில் படக்குழுவினருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை நேரில் அழைத்து தங்க செயின் பரிசளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ACTOR RAJINI KANTH siruthai siva
இதையும் படியுங்கள்
Subscribe