/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pandi_1.jpg)
இயக்குநர்சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சன் பிச்சர்ஸ்நிறுவனம் தயாரிப்பில், தீபாவளி அன்று வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் பாண்டிராஜ்தற்போது சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கிவருகிறார். படத்தின்படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டிவருகிறது. இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில்இயக்குநர் பாண்டிராஜ்கவனம் செலுத்த உள்ளதாகதகவல் வெளியகியுள்ளது. ஆனால் இயக்குநர்தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)