rajinikanth

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் சிவா இயக்கிவரும் படம் 'அண்ணாத்த'. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மேலும், ரஜினிக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை நிறைவு செய்தது.

Advertisment

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக இன்று (19.06.2021) அமெரிக்கா விரைந்துள்ளார். இன்று அதிகாலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த், மூன்றுவார காலம் அமெரிக்காவில் தங்கி ஓய்வெடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment