/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1536.jpg)
இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் மத்திய அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரும் வரும் 13 ஆம் தேதி முதல் 15 தேதி வரை வீடுகளில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அத்துடன் அனைவரும் தேசிய கொடியை தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் முகப்பு படமாக வைக்கவும் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று பாஜகவினர், அக்ஷய் குமார், மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பு படமாகத் தேசியக் கொடியை வைத்துள்ளனர்.
இதனிடையே பிறமொழி நடிகர்கள் பிரதமரின் கோரிக்கையை ஏற்றுச் சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பில் தேசியக் கொடியை வைத்துள்ளனர். ஆனால் பெரும்பாலான தமிழ் நடிகர்கள் பிரதமரின் கோரிக்கையைப் புறக்கணிப்பதாகச் சிலர் கூறி வந்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமரின் கோரிக்கையை ஏற்றுத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தேசியக் கொடியை முகப்பு படமாக வைத்துள்ளார். இவரைப் போன்றே இயக்குநர்கள் செல்வராகவன், மோகன் ஜி, நடிகர் பிரசன்னா உள்ளிட்டோரும் தேசிய கோடியை தங்களது சமூக வலைதளத்தில் முகப்பு படமாக வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)