Advertisment

விவேக் குறித்து நடிகர் ராஜ்கிரண் எழுதிய உருக்கமான கவிதை இணையத்தில் வைரல்!

raj kiran

Advertisment

நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ராஜ் கிரண் உருக்கமான கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

"தம்பி விவேக்,

அண்ணா அண்ணா என்று

என்னை வாய் நிறைய அழைத்த

போதெல்லாம்,

அன்பைத்தேடிப்போனாய்

அறிவைத்தேடிப்போனாய்

பண்பைத்தேடிப்போனாய்

எல்லாவற்றையும் என்னால்

புரிந்து கொள்ள முடிந்தது,

மகிழ்ச்சியாய் இருந்தது...

இப்பொழுது,

தாயைத்தேடிப்போனாயோ

தனயனைத்தேடிப்போனாயோ

யாரை நம்பிப்போனாயோ

எதையுமே என்னால்

புரிந்து கொள்ள முடியவில்லை,

மனம் தவிக்கிறது...

என்ன நினைத்து என் மனதை தேற்றிக்கொள்ள முயன்றாலும்,

என் அறிவு, உன் இழப்பை

ஜீரணித்துக்கொள்ள மறுக்கிறது..."

நடிகர் ராஜ்கிரணின் இந்தக் கவிதை ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டு, இணையத்தில் வைரலாகி வருகிறது

actor Vivek
இதையும் படியுங்கள்
Subscribe