வைரலாகும் இளைஞருக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவ முன்வந்த நடிகர் ராகவா லாரன்ஸ்...

raghava lawrence

வழிப்போக்கராக மதுரையில் வாழ்ந்து வந்த இளைஞர் பின்னர்தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் டீ வியாபாரம் செய்து, பலருக்கு உதவி வருகிறார்.

அண்மையில் இவருடைய தன்னம்பிக்கையான பேச்சு, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. “இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தது பலரையும் உதவ தூண்டும் வார்த்தைகளாக இருந்தது.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கஷ்டப்படும் பலருக்கு உதவி வருகிறார். அவர் இந்த இளைஞர் பேசும் வீடியோவை பகிர்ந்து, “இவருடைய தொடர்பு கிடைக்க உதவுங்கள். அவருக்கு என்னால் முடிந்த உதவியாக ஒரு லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

actor raghava lawrence
இதையும் படியுங்கள்
Subscribe