/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/76_40.jpg)
குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து பிரபலமடைந்த, நடிகர் ஆர்.எஸ். சிவாஜி (67) காலமானார். கமல்ஹாசன் மற்றும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட பல படங்களில் நடித்துள்ளார். கமலுடன் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் பேசிய'சார் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க...' என்ற வசனம் மக்கள் மனதில் பிரபலமானதாக இருந்தது.
அதைத்தாண்டி வில்லன், ஆயுத எழுத்து, கோலமாவு கோகிலா, சூரரைப் போற்று உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு சாய் பல்லவி நடித்த 'கார்கி' படத்தில் சாய் பல்லவியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். யோகி பாபு நடிப்பில் நேற்று (01.09.2023) வெளியான லக்கி மேன் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் இன்று காலை உடல் நலக் குறைவு காரணமாக சிவாஜி மரணமடைந்துள்ளது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)