actor puneeth rajkumar passed away

Advertisment

கன்னட சினிமாவின் பவர் ஸ்டாராக அறியப்பட்ட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாகக் காலமானார். பெங்களூருவில் வசித்துவந்தஇவருக்கு இன்று (29.10.2021) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட புனித் ராஜ்குமாருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் புனித்ராஜ்குமாரின் இந்தத் திடீர் மரணம் கன்னட திரையுலகினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.