Skip to main content

"நா உங்கள ஒவ்வொரு முறை பாக்கும்போதும் வியப்பா தான் பாத்தேன்" - 'குக் வித் கோமாளி' புகழ் உருக்கம்!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021
bfnhdfnhd

 

நடிகர் சின்ன கலைவாணர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இவர் இறப்பதற்கு முன் 'லால் எங்க சிரி பாப்போம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 காமெடி நடிகர்கள் பங்குபெற்றனர். அதில் விஜய் டிவி புகழும் ஒருவராக பங்குபெற்றார். இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் புகழ் மறைந்த நடிகர் விவேக் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

bfddjd

 

"நா உங்கள ஒவ்வொரு முறை பாக்கும்போதும் வியப்பா தான் பாத்தேன். இந்த பயணம் என் வாழ்க்கைல ஒரு மறக்க முடியாத அனுபவம். உங்க முன்னாடி நா பர்ஃபார்ம் பண்ணிருக்கேன்.. அத பாத்து நீங்க சிரிச்சீங்கங்ன்னு யோசிக்கும்போது, நா நிச்சயமா பாக்கியம் பண்ணவன்.  என்னிக்கும் உங்க ஆசிர்வாதத்தோட , புகழ்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“50 பேரிலிருந்து தொடங்குறேன்” - விஜயகாந்த் நினைவிடத்தில் புகழ் அறிவிப்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
pugazh about vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தொடர்ந்து திரை பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் புகழ், மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜயகாந்த் ஐயா, பசின்னு வந்த அனைவருக்கும் சாப்பாடு போட்டிருக்கிறார். அதனால் இனிமேல் மதியம் நானும் சாப்பாடு போட முடிவெடுத்துள்ளேன். 50 பேரிலிருந்து தொடங்குறேன். பசி என்று யாராவது வந்தால் கே.கே நகரில் உள்ள என்னுடைய அலுவலகத்தில் வந்து சாப்பிடலாம். அதற்காக ஆசீர்வாதம் வாங்க தான் இப்போது வந்தேன். கேப்டன் சாருக்காக என்னால் முடிந்தது இதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் இதை கடைபிடிக்கவுள்ளேன்” என்றார்.