/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_158.jpg)
பிரபல தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் 1994ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. கே.முரளிதரன், வி.சுவாமிநாதன் மற்றும் ஜி.வேணுகோபால் மூவரும் இணைந்து நடத்தி வந்த இந்த தயாரிப்பு நிறுவனத்தில் சூப்பர் ஹிட் படங்களான ப்ரியமுடன், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத் தேடி, பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றிபெற்றன. இந்நிலையில் இதில் ஒரு தயாரிப்பாளரான காமெடி நடிகர் வி.சுவாமிநாதன் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தமிழ்த் திரையுலகில் நிகழும் முதல் கரோனா மரணம் இதுவாகும். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளிலும் நடித்து பிரபலமானவர் என்பதுகுறிப்படத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)