Advertisment

போதைப் பொருள் பார்ட்டியில் பிரபல நடிகை; காவல்துறை வெளியிட்ட அறிக்கை

Actor Prayaga Martin Cannabis party

மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றங்கள் ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிரபல ரவுடியை நடிகர்கள் ஸ்ரீநாத் பாஸி, பிரயாகா மார்ட்டின் ஆகியோர் சந்தித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ரவுடி கும்பல் தலைவரான ஓம்பிரகாஷ் கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கூட்டாளி ஷிஹாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இருவரும் மீது 20 வழக்குகள் இருக்கிறன.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தப்பட்டு அதை பார்ட்டி மூலம் பல இடங்களில் விற்கவுள்ளதாகத் தகவல் வந்தது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்த போது ஓம்பிரகாஷ், தான் தங்கியிருந்த ஓட்டலில் பார்ட்டி நடத்தி போதைப்பொருள் விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது என்கின்றனர்.

ஓம்பிரகாஷிடம் நடந்த விசாரணையில் இரண்டு சினிமா நடிகர்கள் உட்பட மொத்தம் 20 பேர் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ரிமாண்ட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மலையாள நடிகர்கள் ஸ்ரீநாத் பாஸி, மற்றும் பிரயாகா மார்ட்டின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இது தற்போது மலையாள திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.

நடிகர் ஸ்ரீநாத் பாஸி கடந்த பிப்ரவரியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். நடிகை பிரயாகா மார்ட்டின் தமிழில் மிஷ்கினின் பிசாசு, ஜீவா - அருள்நிதி நடித்த களத்தில் சந்திப்போம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Cannabis Kerala tollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe