prasanna

சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது சகஜம்தான் சில நேரங்களில் அது சமூக ஊடகங்களை கடந்து வழக்குகளாகவும் போராட்டங்களாகவும் உருவெடுப்பதும் உண்டு. அதுவும் இந்தக் கரோனா காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான சமூக ஊடகப் பயன்பாடு இருக்கிறது. அதை யூ-ட்யூபர்களும், சோஷியல் மீடியா பிரபலங்களும் நன்றாக பயன்படுத்துகின்றனர். லேட்டஸ்ட் சர்ச்சையாக ‘கந்த சஷ்டி’ கவசம் குறித்த வீடியோவும், இன்னொருவர் வரைந்த கார்ட்டூனும் பல விவாதங்களை எழுப்பி வருகின்றன. பொதுவாக சினிமா பிரபலங்கள் இதுபோன்ற விஷயங்களில் எந்தச் சார்பும் எடுக்காமல் ஒதுங்கிக்கொள்வார்கள். வெகுசிலரே கருத்துத் தெரிவிப்பார்கள்.

Advertisment

அந்த வகையில் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் பிரசன்னா, “எவரும் எவருடைய நம்பிக்கையையும் ஓரளவு கடந்து விமர்சிக்கிறேன் என்று கொச்சைப்படுத்துவது பெரிதாய்ப் பேசப்படும் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரை ஏன் கேட்பதில்லை இவரை ஏன் கெட்பதில்லை என்கிற வாதமும் பயன் தராது. அவரவர் நம்பிக்கை அவரவருக்குப் பெரிது. அதை மதிக்கத்தெரியாத போக்கிரிகள் யாராயினும் எவர்க்கெதிராயினும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும். மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மத நம்பிக்கையினும் அதிமுக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.