Advertisment

அஜித் படத்தில் நடிகிறேனா? பிரசன்னா சோகம்!

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆனால், அதனை தொடர்ந்து இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கின்றார்கள், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது போன்ற எந்தவொரு அறிவிப்பும் இன்றி ஷூட்டிங் நடைப்ற்றுக்கொண்டிருக்கிறது. இந்த வருட தீபாவளிக்கு படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

prasanna

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பிரசன்னா அஜித்துக்கு வில்லனாக நடிப்பார் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இதற்கு ஏற்றார்போல நடிகர் பிரசன்னாவும் ட்விட்டரில் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் பிரசன்னா இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை ஒரு சின்ன அறிக்கையாக ட்விட்டரில் பதிவிட்டு தெரிவித்துள்ளார். “‘வலிமை’ படத்தில் நான் நடிக்கவேண்டும் என்று விரும்பி அன்புடன் வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக் கூறிக் கொள்கிறேன். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது நானும் உங்களைப் போலவே ஆவலுடன் காத்திருந்தேன்,

என் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடும் நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 'தல'யுடன் திரையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த அற்புதமான வாய்ப்பு இம்முறை நடக்கவில்லை. இதில் அதீத வருத்தங்கள் இருந்தபோதிலும் உங்கள் அனைவருடைய அன்பினாலும் நான் மிகவும் உறுதியாக உணர்கிறேன்.

இரண்டாவது வாய்ப்பு என்ற ஒன்று எப்போதும் உண்டு. வெகு விரைவில் எனது கனவான 'தல'க்கு வில்லனாக நடிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். எனக்காக முயற்சி செய்த சுரேஷ் சந்திராவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. உங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன். தொடர்ந்து உங்கள் அன்பை எனக்கு அளியுங்கள். எனக்கு அது மட்டும் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

prasana valimai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe