Advertisment

சிவகார்த்திகேயன் பட காமெடி நடிகர் திடீர் மரணம்!

gshshs

Advertisment

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் சில மாதங்களாகவே திரை பிரபலங்களான விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவருவது மக்களிடையே கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்திவருகிறது.

vdgdzsbz

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த காமெடி நடிகர் பவுன்ராஜ் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவர் இறந்த செய்தியை இயக்குநர் பொன்ராம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில்... "#RIPPawnraj வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என பதிவிட்டுள்ளார். இவரது திடீர் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe