parthiban

கடந்த 2015ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் உத்தம வில்லன். இயக்குனர் லிங்குசாமி தயாரித்த இந்த படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார்.

Advertisment

இந்த படத்தில் இயக்குனர் கே. பாலசந்தர், ஜெய்ராம், நாசர், ஊர்வசி, பூஜா குமாரி, ஆண்ட்ரியா, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரிலீஸில் தொடங்கி பல பிரச்சனைகள சந்தித்து, ஒரு நாள் தள்ளியே ரிலீஸானது. மிகவும் கலை தன்மையுடன் எடுக்கப்பட்டதால் தியேட்டரில் இப்படம் பெரிதாக சோபிக்கவில்லை.

Advertisment

ஆனால், இந்த படம் இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாத்ததை உருவாக்கியது. தற்போது கமலின் நடிப்பு குறித்தும், அவருடைய திரைக்கதையில் சிறந்தது எது என்று பேசப்பட்டால் இந்த படத்தையும் குறிப்பிடுகின்றனர்.

Advertisment

அந்த வகையில், இந்த படத்தில் கமல்ஹாசன் தனது மகனிடம் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதை சொல்லும் காட்சியை ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டில் கமெண்ட் செய்துள்ள நடிகர் பார்த்திபன், “கமல் சார் சிறந்த நடிகரே ஆனாலும் அவரின் சிறந்த நடிப்பு இது. Best இதுவரை வந்ததில்...” என்று குறிப்பிட்டுள்ளார்.