Advertisment

பலர் சிரிக்க, சிலர் நெளிய... பார்த்திபன் சொன்ன முத்த ஜோக்! 

நடிகர் பார்த்திபன்... எந்த மேடையேறினாலும் தன் பேச்சால் கலகலப்பை உண்டாக்கி கவனத்தை ஈர்ப்பவர். இன்று அவர் 'ஆடை' படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். எடுத்தவுடனேயே தனது ட்ரேட் மார்க் நகைச்சுவையுடன் பேச்சைத் தொடங்கினார்.

Advertisment

parthiban

"யுத்தமயமான இந்த உலகத்தில் இன்று முத்த தினம். நிறைய பேத்துக்குத் தெரியாது. ஆனா, எனக்குத் தெரியுது. இதிலிருந்தே தெரிஞ்சுக்கங்க, எனக்கு வயசாகலைன்னு. என்னுடைய பிறந்தநாள் என்னைக்குன்னு யாரவது கேட்டா, நான் 14.4.89னு சொல்லுவேன். என் முதல் படம் வெளிவந்த நாள்தான் என் பிறந்தநாள். என் ப்ரொஃபைல்ல பாருங்க அப்படித்தான் இருக்கும். இந்த முத்த தினத்துக்காக நான் ஒரு முத்த ஜோக் சொல்றேன்.

இன்னைக்கு காலையில ஒரு கணவர் தன் மனைவிகிட்ட விளையாட்டா சொல்றார், "நான் என் சம்பளம் இருபதாயிரம் ரூபாய்க்கு பதிலாக இருபதாயிரம் முத்தங்கள் தரேன். நீ அதை வச்சு குடும்பத்தை நடத்து" என்று. உடனே அந்த மனைவி, "அதுக்கென்னங்க, நல்லதுதான். நீங்க இருபதாயிரம் முத்தம் தாங்க. அதுல ஐயாயிரம் முத்தத்தை ஹவுஸ் ஓனருக்கு கொடுத்தர்றேன். மூவாயிரம் முத்தத்தை மளிகை கடைக்காரருக்கும் ஆயிரத்தி ஐநூறு முத்தத்தை கேஸ் சிலிண்டர் வாங்கவும் கொடுத்தர்றேன். மிச்சம் மீதி இருப்பதை அந்த பிரசாத் ஸ்டூடியோவுக்கு வெளியில் இருக்கும் பிச்சைக்காரருக்கு தானமா கொடுக்குறேன்" என்று சொன்னார். அந்த கணவருக்கு 'ஏன்டா கேட்டோம்'னு ஆகிப்போச்சு. இந்த ஜோக் ஏன் சொன்னேன்னா, பெண்கள் மிக மிக ஷார்ப்பானவங்க, மிக மிக போல்டானவங்க. அவங்க ஸ்ட்ரென்த் நமக்கு வராது."

இப்படி பேச்சை முத்த ஜோக்குதான் தொடங்க, அரங்கம் கலகலப்பானது. பெரும்பாலானோர் சிரித்து மகிழ, சிலர் நெளிந்தார்கள்.

Advertisment

Aadai parthiban
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe