Actor NT Ramaswamy gets slapped by a female fan regards love reddy screening

ஸ்மரன் ரெட்டி இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லவ் ரெட்டி’. இதில் அஞ்சன் ராமச்சந்திரா கதாநாயகனாகவும் ஷ்ரவாணி கதாநாயகியாகவும் என்.டி.ராமஸ்வாமி வில்லனாகவும் நடித்துள்ளனர். பிரின்ஸ் ஹென்ரி இசையமைத்துள்ள இப்படம் கடந்த 18ஆம் தேதி வெளியானது.

Advertisment

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் படக்குழுவினர் ரசிகர்களுடன் படம் பார்த்தனர். படம் முடிந்த பின் படக்குழுவினர் அனைவரும் பார்வையாளர்களுக்கு முன் நின்று வரவேற்புக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது ஒரு ரசிகை வேகமாக ஓடி வந்து வில்லனாக நடித்த என்.டி.ராமஸ்வாமியை சட்டையை பிடித்து இழுத்து கண்ணத்தில் அறைந்தார். மேலும் கடுமையாகத் தாக்க முற்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.

Advertisment

அந்த பெண், படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியை என்.டி.ராமஸ்வாமி பிரித்து வைப்பது போல் காட்சி இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படும் நிலையில் அதனால் ஏன் கதாயாகனுக்கும் கதாநாயகிக்கும் இடையில் பிரச்சனையாக நீ இருந்தாய் என்று கேள்வி எழுப்பியபடியே அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment