nitin marriage

Advertisment

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நிதினுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டது.

நடிகர் நிதினின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக துபாயில் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்தவுடன் திருமணத்தை மீண்டும் வெகு விமர்சையாக நடத்தலாம் என்று தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதைய நிலையைப் பார்த்தால் விரைவில் கரோனா அச்சுறுத்தல் முடைவடையாது என்பதால், விரைவில் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆகையால், நிதினின் வீட்டில் ஷாலினியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர். இந்த நிகழ்வில் இரண்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். நிதின் - ஷாலினி இருவரது திருமணம் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும் அறிவிப்பு வெளியானது.

Advertisment

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்கனுமா பேலஸில் நேற்று இரவு 8:30 மணிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்துக்காக தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது, ஆனால் கரோனா அச்சுறுத்தல் பலர் கலந்துகொள்ளவில்லை.சமூக வலைதளங்களில் இந்த ஜோடிக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.