Skip to main content

பிரபல நடிகருக்கு ஹைதராபாத் அரண்மனையில் திருமணம்!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

nitin shalin

 

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நிதினுக்கு ஜூலை 26ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

 

நடிகர் நிதினின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக துபாயில் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 

 

கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்தவுடன் திருமணத்தை மீண்டும் வெகு விமரிசையாக நடத்தலாம் என்று தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதைய நிலையைப் பார்த்தால் விரைவில் கரோனா அச்சுறுத்தல் முடைவடையாது என்பதால் விரைவில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். 

 

ஆகையால், நேற்று நிதினின் வீட்டில் ஷாலினியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்த நிகழ்வில் இரண்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். நிதின் - ஷாலினி இருவரது திருமணம் ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்கனுமா பேலஸில் இரவு 8:30 மணிக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்துக்காக தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஹனுமன்’ - புது அப்டேட் வெளியீடு 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
jai hanuman new update

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான். தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.  

இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் வேர்ல்ட் படமாக வெளியானது. பின்பு டிஸ்னி பிலஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 5 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாகிவருகிறது. 

இந்த நிலையில் இயக்குநர் பிரசாந்த் வர்மா, அவரது சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து (PVCU) மற்றொரு படத்தை எடுக்கவுள்ளார். ஜெய் ஹனுமான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஹனுமான் கதையின் முந்தைய காலகட்டத்தில் நடப்பதை பற்றி இருக்குமென ஹனுமான் படத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது.  

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் முக்கியமான நாளில் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கிய இயக்குநர்,  ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். போஸ்டரில் ஹனுமான் ஒரு குன்றின் மீது கையில் சூலாயுதத்துடன் நிற்க, நெருப்பை கக்கும் டிராகன் பின்னணியில் இருப்பதைக் காணலாம். இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் 3டியில் வெளியாகவுள்ளது. படக்குழு இன்று, ஹனுமான் படத்தின்  100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடுகிறது குறிப்பிடதக்கது. 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்