'கைதி' பட பிரபலத்தை 'விக்ரம்' படத்திற்கு ஒப்பந்தம் செய்த லோகேஷ் கனகராஜ்!

naren

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கவுள்ள படம் விக்ரம். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்னரே இப்படம் தொடர்பான அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டது.

கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்ததால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடைபெற்றது. நடிகர் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது நடிகர் நரேனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் நரேன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் யோசனையில் உள்ள படக்குழு, படத்தின் முதற்கட்டப் பணிகளை அதற்கேற்ப முடுக்கிவிட்டுள்ளது.

lokesh kanagaraj vikram movie
இதையும் படியுங்கள்
Subscribe