தமிழ் சினிமாவில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஏற்றார்போல தன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துபவர்களில் முக்கியமானவர் நாசர். இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 38 ஆண்டுகள் திரைத்துறையில் பயணித்து வரும் நாசர் தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சங்கத் தலைவர் நாசரின் தந்தை மாபுப் பாஷா இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 95. செங்கல்பட்டு தட்டான்மலை தெருவில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் மாபுப் பாஷா மறைந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகினர் உள்ளிட்ட பலரும் நாசருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.