Advertisment

"விதி தன் வேலையைச் சரியாகச் செய்தது" - வடிவேலு குறித்து நடிகர் முத்துக்காளை பேட்டி 

actor muthukaalai about vadivelu

Advertisment

நீண்ட இடைவெளிக்குப் பிறகுவடிவேலு கதாநாயகனாக நடித்து, கடந்த மாதம் வெளியான படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. இப்படத்தை சுராஜ் இயக்க ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் தயாரிப்பில்சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இப்படம்கலவையான விமர்சனத்தையேபெற்றது.

இந்த நிலையில் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் முத்துக்காளை 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படம் குறித்து செய்தியாளர்கள்எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "தான் பிடித்த இடத்தில் மற்றவர்கள் வந்துவிடக்கூடாது என்பதில் எல்லாரும்தெளிவாக இருக்கிறார்கள். அந்த வகையில்தான் வடிவேலு சாரும். நாய் சேகர் படம் சரியாக போகாததற்கு நிறைய பேர் காரணம் சொல்லிட்டாங்க. அதைத்தான் நானும் சொல்கிறேன்.விதி தன் வேலையைச் சரியாக செய்தது.

மேலும் நாங்கள்அவருடன் நடிக்கும்போது வடிவேலு நல்லாவரணும்.அந்த காமெடி பேசப்படணும் என்ற எண்ணத்தில்தான் நடித்தோம். ஆனால் இப்போது உள்ளவர்கள் தான் நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் நடிக்கிறார்கள். அதுவே நாய் சேகர் படத்துக்கு வந்த விமர்சனத்துக்கு காரணமாக இருக்கலாம்." என்றார்.

actor Vadivelu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe