Advertisment

ரத்தன் டாடா பயோபிக்கில் நானா? நடிகர் மாதவன் விளக்கம்!

madhavan

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க, நடிகர் மாதவன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என்று ஒரு புகைப்படமும் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத காரணத்தால் ரசிகர்கள் குழப்பமடைந்தார்கள்.

Advertisment

இந்த நிலையில், இது குறித்து ரசிகை ஒருவர் சமூக வலைதளம் வாயிலாக நடிகர் மாதவனிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கமளித்த மாதவன், "துரதிர்ஷ்டவசமாக இது உண்மையில்லை. இது சில ரசிகர்களின் விருப்பம். இந்த போஸ்டரும் அவர்கள் உருவாக்கிய போஸ்டரே. அடுத்து நான் நடிக்க இருக்கும் படங்களின் பட்டியலில் கூட இந்தப்படம் இல்லை. இது பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை" எனக் கூறினார்.

Advertisment

Madhavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe