actor mamukkoya passed away

பிரபல மலையாள நடிகர் மம்முக்கோயா காலமானார். மலையாள திரையுலகில் 420 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலே நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் 'அரங்கேற்ற வேலை', 'காசு', 'மரக்கர்: லயன் ஆஃப் அரேபியன் சீ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான 'கோப்ரா' படத்தில் நடித்திருந்தார்.

Advertisment

மலப்புறம் மாவட்டத்தில் காளிகாவு என்ற இடத்தில் சில தினங்களுக்கு முன்பு கால்பந்து போட்டியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்ததாக சொல்லப்பட்டது. பின்பு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் தனது 76வது வயதில் காலமாகியுள்ளார்.

Advertisment

இவரது மறைவு மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தற்போது சமூக வலைத்தளங்களில் இரங்கல் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.