நடிகர் தனுஷ், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.தற்காலிகமாக 'டி-43' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
சமீபத்தில் படத்தின் பணிகளைப் பூஜையுடன் தொடங்கிய படக்குழு, முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை விரைவில் தொடங்குவதற்குப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில், படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் மகேந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.