Advertisment

மகனுக்காக துபாயில் குடியேறிய மாதவன்!

actor madhavan shift dubai with family

தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் நடிகர் மாதவன் பல்வேறு படங்களில் நடித்துவருகிறார். தமிழில்இவர்நடிப்பில் கடைசியாக வெளியான ‘விக்ரம் வேதா’, ‘மாறா’ ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இப்படங்களைத்தொடர்ந்துநடிகர் மாதவன், 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

Advertisment

இந்நிலையில் நடிகர் மாதவன், தனது குடும்பத்துடன் துபாயில் குடியேறியுள்ளார். நடிகர்மாதவனின்மகன் வேதாந்த், நீச்சல் வீரராக உள்ளார். சமீபத்தில் பெங்களூருவில் நடந்த தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றார். இதனைத்தொடர்ந்து வேதாந்த் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ளவுள்ளார். இதற்காக அவர் மும்பையில் தீவிர பயிற்சி மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது கரோனா காரணமாக அங்குள்ள நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து தனது மகன் பயிற்சி மேற்கொள்வதற்காக தனது மனைவி சரிதாவுடன் நடிகர் மாதவன் துபாயில் குடியேறியுள்ளார்.

Advertisment

Vedaant Madhavan dubai Madhavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe