Published on 20/08/2020 | Edited on 20/08/2020

பிரபல நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்கிறார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கண்ணில் ஏற்பட்ட பிரச்சினையால் குஷ்புவுக்கு நேற்று (20.08.20) அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “நண்பர்களே... இன்று காலை என் கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சில நாட்களுக்கு சமூகவலைதளங்களில் இயங்க மாட்டேன். விரைவில் திரும்பி வருவேன் என்று உறுதியளிக்கிறேன். வெளியே சென்றால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.