
சின்னத்திரையில் பாண்டியர் ஸ்டோர்ஸ் என்னும் சீரியல் பலருக்கு பரிச்சயமானது, பிரபலமானதும் கூட. இதில் முல்லை என்னும் கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ராவுக்கு இந்த கதபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரும் ரசிகர் கூட்டமே சமூக வலைதளத்தில் உண்டு. மேலும், இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் குமரன் என்பவருக்கும் ரசிகர்கள் உண்டு. ஜோடியாக பிரபலமான இவர்கள் இருவரையும் ஸ்டார் ஜோடி என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது அவருடைய ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் இதற்கு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்து சித்ரா இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துவிட்டார்.
இந்நிலையில் அவருடன் ஒன்றாக நடித்த குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''கதிர் - முல்லை ரசிகர்களுக்கு, எங்கள் பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாக கவலை தெரிவித்திருந்தீர்கள். அதனைப் பற்றி கவலைப்படாதிர்கள். எப்பொழுதும் போல கதிர் - முல்லையிடம் இருந்து சிறந்தவற்றை காண்பீர்கள்.
நான் காதல், சண்டை என எந்த காட்சி வந்தாலும் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். மேலும் இனி செய்யவிருக்கும் காரியங்களையும் சிறப்பாக செய்வேன் என உறுதி கூறுகிறேன். கதிரை பாண்டியன் ஸ்டோரில் மட்டும் தான் பார்க்க முடியும். ஸ்டார் ஜோடி ஷோவில் எங்களை அழைத்திருந்தார்கள்.
ஆனால் அது ஏன் நடக்கவில்லை என்பது கடவுளுக்கு தான் தெரியும். ஸ்டார் ஜோடியில் எங்களை எதிர்பார்த்தவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். எல்லாவற்றிலும் அடுத்து முறை என்ற ஒன்று உண்டு. அதனால் எந்த சிக்கலிலும் தலையிடாமல் கடந்து செல்லுங்கள்'' என்று கூறியுள்ளார்.