‘மாஃபியா’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படம் 'டி-43'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கி, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'டி-43' படத்தில் நடிகர் கிருஷ்ணகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தில் நடிகர் சூர்யாவின் நண்பராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.