Advertisment

கார் விபத்தில் உயிரிழந்த பிரபல கலைஞர்

Actor Kollam Sudhi passed away

மலையாளத்திரையுலகில் நடிகராகவும் மிமிக்ரி கலைஞராகவும் வலம் வந்த கொல்லம் சுதி காலமானார் (39). இவர் 2015ல் வெளியான 'காந்தாரி' படத்தின் மூலம் அறிமுகமானார். 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்', 'குட்டநாடன் மர்ப்பப்பா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பல மேடைகளிலும் மிமிக்ரி செய்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் கோழிக்கோட்டில், நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு தனது காரில் சக கலைஞர்களான பினு அடிமாலி, உல்லாஸ் மற்றும் மகேஷுடன் திரும்பிக் கொண்டிருந்தார் கொல்லம் சுதி. அப்போது கைப்பமங்கலம் அருகே கொல்லம் சுதியின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில் கொல்லம் சுதிக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகக்கூறப்படுகிறது.

Advertisment

மற்ற 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்பு கொல்லம் சுதியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு மலையாளத்திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கல்களைத்தெரிவித்து வருகின்றனர்.

actor mollywood passed away
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe