"பரியேறும் பெருமாளுக்கு பிறகு என் திரையுலக வாழ்க்கையில்...” - நடிகர் கதிர்

actor kathir talk about suzhal web series

தமிழ் திரையுலகில் திரைப்படங்களைத்தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எழுதி, தயாரித்துள்ள வெப்சீரிஸ் 'சுழல்'. பிரம்மா மற்றும் அருண்சரண் இருவரும் இணைந்து இயக்கும் இந்த சீரிஸில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேற்று வெளியான சுழல் ட்ரைலர்ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் வரும் 17 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கதிர், "இந்த தொடரில் நடிக்கும் போது, இந்த தொடர் உலகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் பணியாற்றவில்லை. நம்முடைய கதையை உலகத்தில் உள்ள பலரும், அவர்களுடைய இடத்தில், அவர்களுடைய மொழியில், பார்க்க முடியும் என்றால் அது பெருமகிழ்ச்சி. இந்த தொடரில் இடம் பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் நம் மண் சார்ந்தவை. ஆனால் அவை சர்வதேச பார்வையாளர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன்.‘பரியேறும் பெருமாள்’ என் திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். அதனையடுத்து என் திரையுலக வாழ்க்கையில்அடுத்த கட்டத்தை நோக்கியவளர்ச்சியை ஏற்படுத்திய தொடர் ‘சுழல்’. இதற்காக தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி மற்றும் அமேசானுக்கு என்றென்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

kathir pariyerumperumal
இதையும் படியுங்கள்
Subscribe