Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

‘தளபதி 63’ படத்தில் பரியன்...

kathir


அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிகர் கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தளபதி 63' படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன, விரைவில் இந்த படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சென்னையில் அரங்குகள் அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளார் கலை இயக்குநர் முத்துராஜ்.
 

இதுவரை அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு நடிப்பது மட்டுமே முடிவாகி இருந்தது. இவர்களோடு மேலும் நடிப்பவர்களுக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 

கதிர் நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பலரால் பாராட்டப் பெற்றார். இதற்கு முன்னர் விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து விஜயுடன் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இதை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்