Advertisment

'வாடிவாசல்' படத்தில் உதவி இயக்குநராக இணைந்த காமெடி நடிகர் 

Actor karunas has joined assistant director VaadiVaasal movie

Advertisment

'எதற்கும் துணிந்தவன்' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட பணிகளை முடித்துள்ள வெற்றிமாறன், விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.கடந்த ஆண்டே இப்படம் குறித்தஅறிவிப்பு வெளியான நிலையில் வெற்றிமாறன் 'விடுதலை'படத்திலும், சூர்யா 'எதற்கும் துணிந்தவன்'படத்திலும்பிஸியாக இருந்ததால் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இந்நிலையில் 'வாடிவாசல்' படம் குறித்த முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாடிவாசல்' படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குநராக இணைந்துள்ளார். இத்தகவலை நடிகர் கருணாஸ் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'பொல்லாதவன்' படத்தில் நடித்திருந்த கருணாஸ் தற்போது அவரிடமே உதவி இயக்குநராகவும் பாணியாற்றவுள்ளார்.

vetrimaran actor surya vaadivaasal karunas
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe