kaithi

தேவ் படத்திற்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

Advertisment

இந்நிலையில் உலக மகளிர் தினமான நேற்று (மார்ச்8) இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. நேற்று மாலை ஐந்து மணிக்கு நடிகர் காத்திக் அவர் நடித்த கைதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். ஜெயில் கம்பிகளை போல இரத்தம் வழிவதும், அதன் பின்னணியில் நடிகர் கார்த்தியின் முகம் முறைத்து பார்ப்பதுபோல உள்ளது. மேலும் படத்தின் பெயர் கைதி என்று இருப்பதாலும், போஸ்டரின் ஜெயில் லுக்கை பார்க்கும்போதும் ஏதேனும் குற்றப்பின்னணியை கதைக்களமாக கொண்ட படமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

Advertisment

மேலும் கார்த்தி நடிக்கும் கைதி திரைப்படம் ஒரே இரவில் நடைபெறும் கதைதான் என்பதால் விரைவில் இப்படம் எடுத்து முடிக்கப்பட்டு திரைக்கு வரவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

வெளியான சிறிது நேரத்திலேயே இந்த ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளத்தில் செம வைரலானது.

Advertisment