Advertisment

"எனக்கு நடந்தது அவருக்கும் நடந்துவிடக்கூடாது" - வலிமை வில்லனுக்காக அஜித் செய்த சிபாரிசு

Actor Karthikeya

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வில்லன் நடிகர் கார்த்திகேயாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அஜித் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

Advertisment

"வலிமை படத்தின் கடைசிநாள் ஷூட்டிங்கின் போது எச்.வினோத் சார் என்னிடம் ஒரு விஷயத்தை கூறினார். போட்டோ ஷூட் எடுத்து பார்த்த பிறகு, என்னை வில்லனாக தமிழ் ரசிகர்கள் பொருத்திப் பார்ப்பார்களா என்று வினோத் சாருக்கு சின்ன சந்தேகம் இருந்துள்ளது. தெலுங்கிலிருந்து எதற்கு? தமிழிலேயே ஏதாவது நடிகரை நடிக்க வைப்போமா என்று அஜித் சாரிடம் அவர் கேட்டுள்ளார். அதற்கு அஜித் சார், இனி நாம் மாற்றினால் அது அவருடைய கேரியரை பாதிக்கும். என்னுடைய கேரியரின் தொடக்கத்திலும் இதுபோல் ஒருமுறை ஆகியுள்ளது. நான் கார்த்திகேயாவிடம் பேசியபோது அவர் மிகவும் அர்ப்பணிப்புடனும் ஆர்வமாகவும் இருப்பதுபோல உள்ளது. அதனால் அவரே இருக்கட்டும் என்று அஜித் சார் சொல்லியுள்ளார். இதை வினோத் சார் என்னிடம் சொல்லியபோது இவ்வளவு விஷயங்கள் நடந்துள்ளதா என்று எனக்கு தோன்றியது". இவ்வாறு நடிகர் கார்த்திகேயா தெரிவித்தார்.

Advertisment

valimai Actor Karthikeya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe