Advertisment

"தென்னிந்திய சினிமாவில் விஜய்சேதுபதி ஏற்படுத்திய மாற்றம்" - வலிமை பட வில்லன் புகழாரம்

Actor Karthikeya

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வில்லன் நடிகர் கார்த்திகேயாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் வலிமை படம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட கார்த்திகேயா, நடிகர் விஜய் சேதுபதி குறித்து கூறியவை பின்வருமாறு...

Advertisment

"விஜய் சேதுபதி சார் மாதிரி கதையை தேர்ந்தெடுக்கும் திறமை எனக்கு இருப்பதாக நீங்கள் கூறியதை மிகப்பெரிய பாராட்டாக நினைக்கிறேன். கதையை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்றுதான் நானும் முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன். ஹீரோ, வில்லன், ஹீரோயின் அப்பா என எல்லா கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி சார் நடித்துவிட்டார். சிறந்த நடிகராக நாம் இருந்தால் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் படத்தின் ஹீரோவாக நாம் தெரியமுடியும் என்று புது வகையான ஜானரை தென்னிந்திய சினிமாவில் அவர் உருவாக்கிவிட்டார். அதன் மூலம், என்னை மாதிரியான புது நடிகர்களுக்கு புதிய பாதை உருவாகியுள்ளது. அதற்காக விஜய்சேதுபதி சாருக்கு நன்றி சொல்ல வேண்டும்". இவ்வாறு கார்த்திகேயா கூறினார்.

Advertisment

vijaysethupathi Actor Karthikeya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe