Advertisment

"அஜித்திடமிருந்து கற்ற இந்த விஷயத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கப்போகிறேன்" - 'வலிமை' வில்லன் கார்த்திகேயா பேட்டி

 Actor Karthikeya

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வில்லன் நடிகர் கார்த்திகேயாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் நடிகர் அஜித் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

Advertisment

"வலிமை படத்தின் ரிலீஸை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்புவரை நான் நினைக்கவில்லை. சின்ன வயதில் இருந்தே நடிகராக வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. காலேஜ் முடித்துவிட்டு வீட்டில் சொன்னபோது யாரும் சம்மதிக்கவில்லை. நான் வேறு துறையில் சென்று வெற்றிபெற்றுவிட்டாலும், ஏதாவது சினிமா பட போஸ்டரை பார்க்கும்போது முயற்சி செய்திருந்தால் நாமளும் இந்த மாதிரி ஆகியிருக்கலாமோ என்று வருத்தமாக இருக்கும். வாழ்க்கையில் அப்படி வருத்தப்படாமல் இருக்க வேண்டுமென்றால் நான் கொஞ்ச காலம் முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொல்லி வீட்டில் இருப்பவர்களை சம்மதிக்க வைத்தேன். அவர்களும் எனக்கு நான்கு ஆண்டுகள் அவகாசம் கொடுத்தார்கள். அதேபோல நான்கு ஆண்டுகளில் நான் நடிகராகிவிட்டேன்.

Advertisment

வலிமை பட வாய்ப்பு கிடைத்தபோது தமிழில் அறிமுகமாக நமக்கு ஒரு வாய்ப்பு என்று மட்டும்தான் நினைத்தேன். ஆனால், அஜித் சாரை சந்தித்த பிறகு வெறும் தமிழ் சினிமா வாய்ப்பு என்பதைத் தாண்டி வாழ்நாள் முழுவதும் எனக்கு தேவையானவற்றை கற்றுகொள்ளவதற்கான வாய்ப்பாக இந்தப் படம் அமைந்துவிட்டது. பிரபலமாக இருப்பது என்பது சாதாரணமான ஒன்றுதான். மற்றவர்களைப்போல பிரபலங்களும் சாதாரண மனிதர்களே. எந்நேரமும் நாம் மட்டும் மரியாதையை எடுத்துக் கொள்ளக்கூடாது. மற்றவர்களையும் மதிக்க வேண்டும் என அஜித் சார் நிறைய சொல்வார். அஜித் சாருடன் அமர்ந்து பேசும்போது நமக்கு மிகவும் மரியாதையும் முக்கியத்துவமும் கொடுப்பார். அவர் அப்படிச் செய்யும்போது நம்மை அறியாமலேயே வேலையை இன்னும் சிறப்பாகச் செய்வோம். அஜித் சாரிடம் இருந்து கற்ற இந்த ஒரு விஷயத்தை வாழ்நாள் முழுவதும் நான் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். அவருடைய படங்கள், அவருடைய நடிப்பு என்பதைத் தாண்டி தனிநபராகவும் அஜித் சாரை நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது". இவ்வாறு நடிகர் கார்த்திகேயா தெரிவித்தார்.

valimai Actor Karthikeya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe