Advertisment

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!

karthik

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிய நடிகர் கார்த்திக், 90களில் முன்னணி நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்தார். தற்போது துணை கதாபாத்திரங்களில் நடித்துவரும் கார்த்திக்,‘தீ இவன்’, ‘அந்தகன்’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இவர், நேற்று (28.07.2021) மாலை போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்தார். அதில் அவருக்குப் பலத்த அடி ஏற்பட்டு காலில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அடிபட்டதால் எலும்பில் விரிசல் ஏற்பட்டது தெரியவந்தது.

Advertisment

மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் ஓய்வெடுத்துவருகிறார். தற்போது கார்த்திக் நலமாக இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

actor karthik
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe