Advertisment

சுயசரிதை எழுதும் ‘நவரச நாயகன்’!

actor karthik

பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நவரச நாயகன் கார்த்திக். பழம் பெரும் நடிகர் ஆர். முத்துராமனின் மகன் ஆவார்.

Advertisment

80 களில் நடிக்கதொடங்கி படிப்படியாக முன்னணி நடிகராக வலம் வந்த கார்த்திக் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இதனால் சில காலங்கள் படங்களில் கவனம் செலுத்துவதைக் குறைத்துக்கொண்டுஅரசியலிலும்ஈடுபட்டார் கார்த்திக்.

Advertisment

ஊரடங்கிற்கு முன்பாக நடிகர் கார்த்திக் இயக்கப்போகும் படத்திற்கான கதையை எழுதி வந்தார் என்று தகவல் வெளியானது. இதன்பின் கரோனா ஊரடங்கில் வீட்டிலேயே இருக்கும் கார்த்திக், தனது சுயசரிதையை எழுதி வருகிறாராம். இதில் அவர் திரையுலகிற்கு வந்த விதம், பிரபலங்களுடனான நட்பு, சந்தித்த மனிதர்கள் உள்ளிட்டவற்றை மட்டும் எழுதி வருகிறார். இது புத்தமாக வெளியாகுமா என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.

actor karthik
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe