karthi

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Advertisment

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி இன்று (25.05.2021) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் நடிகர் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துதெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், நடிகர் கார்த்தி தன்னுடைய ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Advertisment

அக்கடிதத்தில், “அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம். இந்தக் கரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவிற்கு மிகக் கடுமையாக உள்ளது. அரசாங்கமும் மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், வசிப்பிடத்தைவிட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.