ADVERTISEMENT

"என் படத்திற்கு மீண்டும் யுவன் கிடைத்தது மகிழ்ச்சி" - நடிகர் கார்த்தி ட்வீட்

10:50 AM Dec 22, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் கார்த்தி, முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் ‘விருமன்’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், இயக்குநர் முத்தையா மற்றும் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் ஆகியோரை பாராட்டிய கார்த்தி, ‘விருமன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள அதிதி ஷங்கருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ‘விருமன்’ படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு நன்றி கூறிய கார்த்தி, “என் படத்திற்கு இசையமைப்பாளராக மீண்டும் யுவன் கிடைத்தது மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

கார்த்தி நடிப்பில் வெளியான ‘பருத்திவீரன்’, ‘நான் மகான் அல்ல’, ‘பிரியாணி’, ‘பையா’, ‘சுல்தான்’ உள்ளிட்ட படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT