actor karthi talk about paruthiveeran movie

Advertisment

கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர்அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக கார்த்தி அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியாமணிநடித்திருந்தார். இப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடிக்க தனது முதல் படத்திலேயே பலரின் கவனத்தையும் பெற்றார் கார்த்தி. மேலும் இந்த படம் அனைத்து தரப்பாலும் கொண்டாடப்பட்டு பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தது.இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி 'ஆயிரத்தில் ஒருவன்', 'பையா', 'நான் மகான் அல்ல', 'கொம்பன்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தாலும், கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் 'பருத்திவீரன்' திரைப்படம் மறக்க முடியாத படமாக இன்றளவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றோடு15வருடங்கள் ஆகியுள்ளதைஅடுத்து நடிகர் கார்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,பருத்திவீரன் படத்தின் மூலம் எனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கியதை நான் பாக்கியமாக கருதுகிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சார் வடிவமைத்து என்னை பயிற்றுவித்தார், எல்லா புகழும் அவருக்கே. கற்றுக்கொண்ட பல பாடங்களில், நான் செய்யும் வேலையில் மூழ்கி மகிழ்வதற்கு அவர் எனக்குக் கற்றுக் கொடுத்த விதத்தை நான் இன்னும் பொக்கிஷமாகக் கருதுகிறேன். இந்த அழகான பாதையில் என்னை அழைத்துச் சென்ற அமீர் சார், ஞானவேல்அண்ணா, என் அன்பான ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு என் மனமார்ந்த நன்றி”எனக் குறிப்பிட்டுள்ளார்.