
இந்தியாவில் மிகவும் பிரபலமான புகழ்பெற்ற மேடை நாடக இயக்குனராகவும், நடிப்பு பயிற்சியாளராகவும் இருந்த இப்ராஹிம் அல்காசி காலமானார்.
டெல்லியில் அமைந்துள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் இவரிடம் நடிப்பு பயிற்சி பெற்று, இன்று பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் பலர். இதனிடையே தனது 94 -ஆவது வயதில், உடல்நலக்குறைவு காரணமாக, இன்றுஇயற்கை எய்தியுள்ளார் இப்ராஹிம் அல்காசி.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்ராஹிம் அல்காசி குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய தியேட்டர் ட்ராமக்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து, பல நல்ல நடிகர்களுக்கு குருவாக இருந்த இப்ராஹிம் அல்காசி,தலைமுறைகள் கடந்து கொண்டாடப்படுவார். ட்ராமாக்கள் மற்றும் கலை மீது அவருக்கு இருந்த காதல் மிகப்பெரியது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)