actor kamal haasan wishes arvind kejriwal punjab election victory

Advertisment

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி. காங்கிரஸ் கட்சி 18 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைத் தழுவியது. இதையடுத்து டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபிலும் ஆட்சிக் கட்டிலில் அமையவுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும், அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடவேண்டிய வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால். கட்சி தொடங்கிய ஒரே தசாப்தத்தில் மாநில எல்லை கடந்து இரண்டாம் மாநிலத்தில் அழுத்தமாகக் காலூன்றியிருக்கும் ஆம் ஆத்மியைப் பாராட்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.